2026 October 11, Sunday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 34° 🌧️ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

சுரேஷ் சலே பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றில் ஆஜர்

உள்ளூர்April 22, 2026 · 6 months முன்3
சுரேஷ் சலே பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றில் ஆஜர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, குற்றப்புலனாய்வுத் திணைக்கள  அதிகாரிகளால் பலத்த பாதுகாப்புடன் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

கடந்த வழக்கு விசாரணையின் போது, கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார பிறப்பித்த உத்தரவிற்கமைய, சந்தேகநபரான சுரேஷ் சலே நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மூன்றாவது சந்தேகநபராக சுரேஷ் சலேவை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் பெயரிட்டுள்ளது.

சுரேஷ் சலே சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளதால், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கடந்த வழக்குத் தவணையின் போது கோட்டை நீதவான் உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவிற்கு அமையவே அவர் இன்று நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணை இன்னும் சற்று நேரத்தில் கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.