2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

மின்சாரக் கட்டண நிர்ணய அதிகாரம் PUCSL-க்கு மட்டுமே அதிகாரம்

உள்ளூர்April 22, 2026 · 4 months முன்0
மின்சாரக் கட்டண நிர்ணய அதிகாரம் PUCSL-க்கு மட்டுமே அதிகாரம்

மின்சாரக் கட்டண முறையைத் தயாரிப்பதற்கும், அதற்கு அனுமதி வழங்குவதற்கும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு மாத்திரமே அதிகாரம் உள்ளதாக, அதன் தொடர்பாடல் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.

எரிசக்தி அமைச்சு என்பது மின்சாரத் துறையின் உரிமையாளர் மாத்திரமே என்பதால், தமக்கான கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் உரிமையாளருக்கு இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதனிடையே, தற்போது இலங்கையில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின்சாரக் கட்டணம் திருத்தப்படும் முறை நடைமுறையில் உள்ளது.

ஆனால், இதனை மாற்றி ஆண்டுக்கு ஒருமுறை மாத்திரமே கட்டணத் திருத்தம் செய்யும் புதிய முறையைக் கொண்டுவர நிதி அமைச்சும், எரிசக்தி அமைச்சும் ஆலோசித்து வருவதாக ஜெயநாத் ஹேரத் கூறியுள்ளார்.எனினும், மின்சாரக் கட்டணத்தைச் சீரமைப்பதற்கான சூத்திரத்தை ஆணைக்குழுவே தயாரிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போதே, நியாயமான செலவு மற்றும் சரியான இலாபத்தை உறுதி செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், ஆண்டுக்கு எத்தனை முறை கட்டணத்தை மாற்றுவது என்பது போன்ற ‘கொள்கை முடிவுகளை’ எடுக்கும் அதிகாரம் அமைச்சரவைக்கும், அரசாங்கத்துக்கும் உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தொடர்பாடல் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.