2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 31°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

உள்ளூர்December 28, 2025 · 8 months முன்2

கடற்படையினர் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு கடலில் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த வேளை நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து படகொன்றில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த மூன்று தமிழக கடற்தொழிலாளர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் அவர்களின் படகினையும் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்து , படகினை அப்பகுதியில் தடுத்து வைத்ததுடன் , மூன்று கடற்தொழிலாளர்களையும் கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.