2026 October 12, Monday ⛅ கொழும்பு 23° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

இலங்கை – இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை

விளையாட்டுFebruary 22, 2026 · 8 months முன்2
இலங்கை – இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை

சுப்பர் 8 சுற்றில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (22) பல்லேகலை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இப்போட்டி பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சுப்பர் 8 சுற்றின் முதலாவது போட்டி நேற்று (21) பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணித் தலைவர் சல்மான் ஆகா முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.

எவ்வாறாயினும்இ கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் இடைவிடாது பெய்த மழை காரணமாகப் போட்டியைக் கைவிட ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்தனர்.

இதற்கமையஇ இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வீதம் வழங்கப்பட்டது.