2026 August 15, Saturday ⛈️ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

கிழக்கு மாகாண பாடசாலைகளின் விளையாட்டு விழா ஆரம்பம்

உள்ளூர்September 3, 2025 · 12 months முன்0

இவ்வாண்டுக்கான கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் கல்வி அமைச்சினால் மாகாண ரீதியில் முன்னெடுக்கப்படும் இந்நிகழ்வு மாகாண விளையாட்டு அமைச்சின் செயலாளர் கே.குகநாதன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விளையாட்டு நிகழ்வு தொடர்ந்து ஐந்து நாட்கள் இடம்பெற்று எதிர்வரும் 07ஆம் திகதி இறுதி நாள் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.

இன்றைய இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்தின சேகர கலந்து கொண்டு இவ்விளையாட்டு விழாவை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது மட்டு நகரின் பிரபல பெண்கள் பாடசாலை மாணவர்களின் வரவேற்பு நடனம் இடம்பெற்றதுடன், கலை கலாசார நிகழ்வுகளும் இங்கு இடம்பெற்றன.

இதன்போது கிழக்கு மாகாண கல்வி வலையங்களிலுள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த ஆரம்ப நிகழ்விற்கு கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி.சிரியா குணவர்த்தன, விளையாட்டு அமைச்சின் உயர் அதிகாரிகள், வயலக் கல்விப் பயிப்பாளர்கள், கல்வி திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், பாடசாலைகளின் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.