2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 25° ☀️ யாழ்ப்பாணம் 28° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து திட்டம்

உள்ளூர்February 6, 2026 · 6 months முன்0

வரவிருக்கும் இருபதுக்கு 20 (T20) உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறும் காலப்பகுதியில் கொழும்பு நகரை மையமாகக் கொண்டு விசேட போக்குவரத்துத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாகக் கொழும்பு போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது. 

அதன்படி, நாளை முதல் மார்ச் 8 ஆம் திகதி வரை போட்டி நடைபெறும் காலப்பகுதியில், மாளிகாவத்தை ஆர். பிரேமதாச விளையாட்டரங்கம் மற்றும் கறுவாத்தோட்டம் SSC விளையாட்டரங்கம் ஆகியவற்றை அண்டிய பகுதிகளில் இந்தப் போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படும். 

இக்காலப்பகுதியில் குறித்த மைதானங்களில் நடைபெறும் போட்டிகளைக் காண்பதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ரசிகர்கள் பெருந்திரளாக வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அப்போட்டிகள் நடைபெறும் நாட்களுக்கு ஏற்றவாறு இதனை நடைமுறைப்படுத்தக் கொழும்பு போக்குவரத்துப் பிரிவு திட்டமிட்டுள்ளது.