மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு அடையாள அட்டைகள்!

அரச நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் சேவைகளை வழங்குவதற்காக, புதிய சிறப்பு அடையாள அட்டைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய சபை நடத்திய விசேட கூட்டத்தின் போதே இதற்கான அதிகாரப்பூர்வ தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் உபாலி பன்னில தலைமையில் இடம்பெற்ற விசேட நிகழ்வின் போதே இந்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த புதிய அடையாள அட்டை நடைமுறையின் மூலம் மாற்றுத்திறனாளிகள் அரச அலுவலகங்களில் எவ்வித தாமதமுமின்றி தங்களுக்கான தேவைகளை விரைவாகப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்படவுள்ளது.