2026 August 15, Saturday ⛈️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று ஜனாதிபதியுடன் சந்திப்பு

உள்ளூர்December 23, 2025 · 8 months முன்1

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு இன்று (23) முற்பகல் நடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கிடையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர்களையும் சந்திக்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் நேற்று பிற்பகல், இந்திய விமானப்படைக்கு சொந்தமான விசேட விமானம் ஒன்றின் மூலம் நாட்டை வந்தடைந்துள்ளார்.

இந்த விஜயம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட பிரதிநிதியாக எஸ். ஜெய்சங்கர் மேற்கொள்வதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்திய அரசாங்கத்தின் ஆதரவை மேலும் வலுப்படுத்துவதுதான் இந்த விஜயத்தின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முக்கிய சந்திப்புகளை நிறைவு செய்த பின்னர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இன்று (23) பிற்பகல் நாட்டை விட்டு புறப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.