2026 October 9, Friday ⛅ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

நாட்டில் வேகமாக அதிகரிக்கும் தோல் புற்றுநோய் பாதிப்பு!

உள்ளூர்May 7, 2026 · 5 months முன்1
நாட்டில் வேகமாக அதிகரிக்கும் தோல் புற்றுநோய் பாதிப்பு!

நாட்டில் தோல் புற்றுநோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.அதிகப்படியான சூரிய ஒளியின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

புற்றுநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் மருத்துவர் ஹசந்தி ஜெயலத் இது குறித்துத் தெரிவிக்கையில்,

நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 35,000 தோல் புற்றுநோய் சம்பவங்கள் பதிவாவதுடன், கிட்டத்தட்ட 15,000 உயிரிழப்புகள் ஏற்படுவதாகக் குறிப்பிட்டார்.அத்துடன், தினமும் சராசரியாக 100 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்படுவது நோயின் தீவிரத்தன்மையைக் காட்டுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சூரிய ஒளி மிகத் தீவிரமாக இருக்கும் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையான காலப்பகுதியில் நேரடியாக வெயிலில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

சூரிய ஒளியினால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க குறைந்தது SPF 30 கொண்ட சூரிய பாதுகாப்பு களிம்புகளை (Sunscreen) பயன்படுத்துவது அவசியம்.

வெளியில் செல்லும் போது தொப்பிகள் மற்றும் தோலை முழுமையாக மூடியிருக்கும் வகையிலான பாதுகாப்பு ஆடைகளை அணியுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.