2026 September 7, Monday ⛅ கொழும்பு 31° ⛅ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 29° ⛅ மட்டக்களப்பு 33°
LIVE
நாமலை சந்திக்க வெலிக்கடை சென்ற ஷிராந்தி!சத்யா நிகேதனில் கட்டிடம் சரிந்து பெரும் விபத்து!ஜெனிவாவில் இன்று இலங்கை மனித உரிமைகள் அறிக்கை முன்வைப்பு!சுற்றுலாப் பயணம் சோகத்தில் முடிந்தது – 25 பேர் உ#யிரிழப்பு!இலங்கை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முக்கிய அறிக்கை!பங்களாதேஷுக்கு எதிராக இலங்கை மகளிர் அணி வெற்றி!இந்தியா சென்ற 13 பேர் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்!இன்று 12:08க்கு 6 பகுதிகளுக்கு மேலாக சூரியன் உச்சம்!

நாட்டை மீட்ட தலைவரை சிறையில் தள்ளுவதா..! ரணிலின் கைதுக்கு எதிராக அலி சப்ரி போர்க்கொடி

உள்ளூர்August 24, 2025 · 1 year முன்2
நாட்டை மீட்ட தலைவரை சிறையில் தள்ளுவதா..! ரணிலின் கைதுக்கு எதிராக அலி சப்ரி போர்க்கொடி

நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கிய சந்தர்ப்பத்தில் நாட்டைச் சரிவில் இருந்து ரணில் விக்ரமசிங்கவே மீட்டார், அப்படியான ஒரு தலைவரை அரசியல் ரீதியில் பழிவாங்கும் வகையில் சிறையில் அடைப்பதா என முன்னாள் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமைக்கு அலி சப்ரி கடும் எதிர்ப்பு வெளியிட்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அத்துடன் சமூக ஊடகச் செயற்பாட்டாளர் ஒருவர் கணித்ததாகக் கூறப்படுவதற்கு அமைய, ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளமை வருத்தமளிக்கின்றது என்றும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.