2026 October 12, Monday ⛅ கொழும்பு 23° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

சங்கீத்சனின் பிணை மனு தீர்ப்பு ஜூன் 23ல்!

உள்ளூர்June 11, 2026 · 4 months முன்3
சங்கீத்சனின் பிணை மனு தீர்ப்பு ஜூன் 23ல்!

சொல்லிசை கலைஞர் கணேஷன் சங்கீத்சனின் பிணை மனு மீதான கட்டளை எதிர்வரும் 23 ஆம் திகதி அறிவிக்கப்படும் என யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த பிணை மனு இன்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டதாக சங்கீத்சன் சார்பில் மன்றில் முன்னிலையாகிய சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கணேஷன் சங்கீத்சனுக்கு பிணை வழங்குமாறு கோரியே குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள கட்டளைகள் தொடர்பிலும், சங்கீத்சன் சார்பில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு, நாளை அல்லது, எதிர்வரும் 15 அல்லது 16 ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்படும் எனவும் சங்கீத்சனின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கணேஷன் சங்கீத்சன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவரின் விடுதலையை வலியுறுத்தி, வடக்கு, கிழக்கிலும், சர்வதேச நாடுகளிலும் கண்டனங்கள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.