2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 28°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

மஹையாவ பிரதேச மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள்

உள்ளூர்September 15, 2025 · 11 months முன்2

மஹையாவ பிரதேசத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் இன்று (14) பிற்பகல் கண்டி மாவட்ட செயலகத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நடைபெற்றது.

மஹையாவ பூர்னவத்த மேற்கு கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், 2025 மே 31 திகதி ஜனாதிபதி நிதியத்தின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் போது, அபிவிருத்தித் திட்டங்களை செயல்படுத்துவது பொருத்தமானது என்பது கண்டறியப்பட்டது. அதன் ஒரு கட்டமாக, பாடசாலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

அதன் முதல் கட்டமாக, 28 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் ஹங்சக விஜேமுனி, பாராளுமன்ற உறுப்பினர் தனுர திசாநாயக்க, மத்திய மாகாண பிரதம செயலாளர் எம்.ஏ. பிரேமசிங்க, கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த மற்றும் பிரதேச செயலாளர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.