2026 September 18, Friday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 31° ⛅ கண்டி 28° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
ரயில் போராட்டம் நீடிப்பு – சேவைகள் பாதிக்குமா?சட்டவிரோத வருமானம் சந்தேகம் – ரூ.14 கோடி சொத்துக்கள் முடக்கம்!முல்லைத்தீவு, பொலன்னறுவையில் பிற்பகல் மழை சாத்தியம்!ரூ.34 பில்லியனுக்கும் அதிக முதலீடு – அநுராதபுர வைத்தியசாலை மேம்பாடு!இலங்கை துடுப்பாட்டத்தின் புதிய நம்பிக்கை – சொனால் தினுஷ!தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் அனுமதிப்பத்திர சர்ச்சை!யோஷித ராஜபக்ச–வசந்த கரன்னகோடா வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில்குடியேற்ற அழுத்தம் அதிகரிப்பு – மாணவர் விசாவில் கடுமை!

முல்லைத்தீவு, பொலன்னறுவையில் பிற்பகல் மழை சாத்தியம்!

உள்ளூர்September 18, 2026 · 1 hour முன்2
முல்லைத்தீவு, பொலன்னறுவையில் பிற்பகல் மழை சாத்தியம்!

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் 50 மி.மீ இற்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (18) அதிகாலை விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். 

வடமேல் மாகாணத்தில் அடிக்கடி மழை பெய்யக்கூடும். 

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.