2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

ஜனாதிபதி இன்று கண்டிக்கு விஜயம்

உள்ளூர்February 6, 2026 · 6 months முன்1

டித்வா’ புயலினால் கண்டி மாவட்டத்தில் முழுமையான மற்றும் பகுதியளவு வீடுகள் சேதமடைந்த நபர்களுக்குப் புதிய வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்தல், நட்டஈடு வழங்குதல் மற்றும் சில அபிவிருத்தித் திட்டங்களின் பணிகளை ஆரம்பித்தல் என்பன ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று கண்டியில் நடைபெறவுள்ளது. 

அதற்கமைய, ‘டித்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட குண்டசாலை, மெததும்பர, பாததும்பர மற்றும் பன்வில பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள கைத்தொழிலாளர்களுக்கும், முழுமையான மற்றும் பகுதியளவு வீடுகள் சேதமடைந்த குடும்பங்களுக்கும் நட்டஈடு வழங்கும் நிகழ்வு இன்று முற்பகல் 9.00 மணிக்கு குண்டசாலை மத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெறும். 

‘டித்வா’ புயலினால் தமது கைத்தொழில் நிலையங்கள் அல்லது இயந்திர உபகரணங்கள் போன்றவற்றிற்குச் சேதம் ஏற்பட்ட நபர்களுக்கு, வியாபாரத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்காக நட்டஈட்டுத் தொகையாக 02 இலட்சம் ரூபா வீதம் இதன்போது வழங்கப்படவுள்ளது. 

சிறிய, நடுத்தர அல்லது பாரிய அளவு என்ற பேதமின்றி பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வியாபாரங்களுக்கும் இந்த நிதியுதவி ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய மேற்கொள்ளப்படுகிறது.