2026 October 12, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 29°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

ஜூலை 1க்கு முன் முன்பள்ளிகள் பதிவு செய்ய வேண்டியது அவசியம்!

உள்ளூர்May 5, 2026 · 5 months முன்4
ஜூலை 1க்கு முன் முன்பள்ளிகள் பதிவு செய்ய வேண்டியது அவசியம்!

எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் நாட்டின் அனைத்து முன்பள்ளிகளும் பதிவு செய்யப்பட வேண்டும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் ஒரு முன்பள்ளியை ஆரம்பிப்பதற்கு முன்னர் அதனைப் பதிவு செய்வது கட்டாயமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

முன்பள்ளி கல்விக்கான வேலைத்திட்டம் அமைச்சின் பாடப்பரப்பிற்கு அமைய எவ்வாறு செயற்படுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பில் மாத்தறை மாவட்ட செயலகத்தில் விழிப்புணர்வு நிகழ்வொன்று நடைபெற்றது. 

அதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே சரோஜா சாவித்திரி போல்ராஜ் இதனைத் தெரிவித்துள்ளார்.