2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

சட்டவிரோத செயல்கள்: 37 சீனர்கள் இலங்கையில் இருந்து நாடுகடத்தல்!

உள்ளூர்May 5, 2026 · 3 months முன்2
சட்டவிரோத செயல்கள்: 37 சீனர்கள் இலங்கையில் இருந்து நாடுகடத்தல்!

சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட 37 சீனப் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டனர். சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்டு, வெலிசர தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த 37 சீனப் பிரஜைகளே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இவர்கள் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் விதிமுறைகளை மீறி, சட்டவிரோத முறையில் நாட்டில் தங்கியிருந்ததுடன் பல்வேறு சட்டவிரோதச் செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளனர். நாடு கடத்தப்பட்டவர்களில் 6 பெண்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இவர்களை சீனாவிற்கு அழைத்துச் செல்வதற்காக அந்நாட்டின் 11 பாதுகாப்பு அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர். 

இவர்கள் அனைவரும் நேற்று இரவு 10.50 மணியளவில், சீன ஈஸ்டர்ன் விமான சேவைக்குச் சொந்தமான MU-714 என்ற சாதாரண பயணிகள் விமானம் மூலம் சீனாவிலுள்ள குன்மிங் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.