2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

செம்மணி புதைகுழி: குழந்தை உட்பட 4 என்புக்கூட்டுகள் மீட்பு!

உள்ளூர்May 5, 2026 · 3 months முன்3
செம்மணி புதைகுழி: குழந்தை உட்பட 4 என்புக்கூட்டுகள் மீட்பு!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் 7ஆம் நாளாக நேற்று முன்னெடுக்கப்பட்டன.இந்த அகழ்வில், குழந்தை ஒன்றின் என்புக்கூட்டுடன் சேர்த்து மொத்தம் 4 என்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இதுவரை இந்த புதைகுழியில் 250 மனித என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 247 முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சில முக்கிய சான்றுப் பொருட்களும் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதுடன், அவை நாளை அகழ்ந்து எடுக்கப்படும் என்றும் அதன் பின்னர் மேலதிக தகவல்கள் வெளியிடப்படும் என்றும் சட்டத்தரணி ஞா. ரனித்தா தெரிவித்துள்ளார்.