2026 October 19, Monday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

கிரிபத்கொட மற்றும் பாணந்துறையில் போதைப்பொருள் வலையமைப்புக்கு போலீசார் அதிரடி!

உள்ளூர்July 19, 2026 · 3 months முன்6
கிரிபத்கொட மற்றும் பாணந்துறையில் போதைப்பொருள் வலையமைப்புக்கு போலீசார் அதிரடி!


கிரிபத்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்பிடிகொட பகுதியில் ஐஸ் போதைப்பொருள், ஹெரோயின் மற்றும் பெருமளவிலான போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று (18) இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

இதன்போது சந்தேகநபரிடமிருந்து 06 கிலோ 96 கிராம் ஐஸ் போதைப்பொருள், 02 கிலோ 70 கிராம் ஹெரோயின் மற்றும் 5,000 போதை மாத்திரைகள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திக்பிடிகொட பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதேவேளை, 18 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) மனிதக் கொலைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குறித்து பொலிஸார் பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

 

நேற்று (18) இரவு மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட சோதனையின் போது, சந்தேகநபரிடமிருந்து 18 கிலோ 716 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் மின்னணு தராசு ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பாணந்துறை, அளுபோமுல்ல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, இரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் வழிகாட்டுதலின் கீழ், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகிப்பதற்காகவும், கடத்துவதற்காகவும் இந்த போதைப்பொருள் தொகுதி கொண்டு வரப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

 

இதற்கமைய, சந்தேகநபரை இன்றைய தினம் (19) பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தி 7 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.