2026 September 7, Monday ⛅ கொழும்பு 31° ⛅ யாழ்ப்பாணம் 31° ⛅ கண்டி 31° ⛅ மட்டக்களப்பு 33°
LIVE
சத்யா நிகேதனில் கட்டிடம் சரிந்து பெரும் விபத்து!ஜெனிவாவில் இன்று இலங்கை மனித உரிமைகள் அறிக்கை முன்வைப்பு!சுற்றுலாப் பயணம் சோகத்தில் முடிந்தது – 25 பேர் உ#யிரிழப்பு!இலங்கை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முக்கிய அறிக்கை!பங்களாதேஷுக்கு எதிராக இலங்கை மகளிர் அணி வெற்றி!இந்தியா சென்ற 13 பேர் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்!இன்று 12:08க்கு 6 பகுதிகளுக்கு மேலாக சூரியன் உச்சம்!பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் உட்பட 11 பேருக்கு மர#ண தண்டனை!

பிள்ளையானின் துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் ஒருவர் காத்தான்குடியில் கைது

உள்ளூர்August 17, 2025 · 1 year முன்2
பிள்ளையானின் துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் ஒருவர் காத்தான்குடியில் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் துப்பாக்கிதாரியான சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை, இன்று(13) குற்றப்புலனாய்வுத் துறையினரால் மட்டக்களப்பு காத்தான்குடியில் உள்ள அவரது வீட்டில் வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம், கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்படு காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டிருந்தார்.

மட்டக்களப்பில் கைது அவரிடம் தொடர்ந்து இடம்பெற்றுவரும் விசாரணையையடுத்து காத்தான்குடியைச் சேர்ந்தவரும் கடந்த காலத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இருந்து பிள்ளையானுடன் செயற்பட்ட 45 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.


இதேவேளை கைது செய்யப்பட்டவர் , கடந்த 2024 ஜுன் 17ஆம் திகதி காத்தான்குடி மீன்பிடி இலாகாவீதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் இருந்த பெணிடம் தங்க ஆபரணங்களை கொள்ளையடிப்பதற்காக கை துப்பாக்கியால் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடாத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

இதனையடுத்து, அவரை பொலிஸார் கைது செய்து 3 நாள் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்த நிலையில் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இதன் பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.