2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 25° ☀️ யாழ்ப்பாணம் 28° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

அடுத்த பாராளுமன்ற அமர்வு

உள்ளூர்April 6, 2026 · 4 months முன்0

2026 ஏப்ரல் மாதத்திற்கான நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு 7 நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளது. சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையின்படி, எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த விவாதம் நடத்தப்படவுள்ளது.

நாடாளுமன்றம் ஏப்ரல் 7ஆம் திகதி முதல் இந்த வாரம் மூன்று நாட்களுக்குக் கூடவுள்ளது. எனினும், அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள பொது விடுமுறை காரணமாக புதன்கிழமை சபை அமர்வுகள் நடைபெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விவாதம் எதிர்வரும் வியாழக்கிழமை (09) பிற்பகல் 2:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடைபெறும்.

அத்தோடு எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் வெள்ளிக்கிழமை நடத்தப்படவுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னாலுள்ள சூத்திரதாரிகளைக் கண்டறிவது தொடர்பாக அண்மைக்காலமாக எழுந்துள்ள அரசியல் சர்ச்சைகள் மற்றும் புதிய வெளிப்பாடுகள் குறித்து இந்த விவாதத்தின் போது விரிவாக ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.