2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 28°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

எதிர்க்கட்சித் தலைவரின் புத்தாண்டுச் செய்தி

உள்ளூர்January 1, 2026 · 8 months முன்1

2026ஆம் ஆண்டு இலங்கை திருநாட்டிற்குப் பல்வேறு சவால்கள் நிறைந்த ஆண்டாக அமையும் என்பதில் ஐயமில்லை என்றும், அவற்றை உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல் அறிவார்ந்த ரீதியில் எதிர்கொள்ள மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார். 

பொருளாதார, சமூக மற்றும் அரசியல் ரீதியாக நாடு சந்தித்து வரும் நெருக்கடிகள் தற்போது புதிய பரிமாணங்களை எட்டியுள்ளன. இவ்வாறான சிக்கலான சூழலை வெறும் ஒருதலைப்பட்சமான திட்டங்களால் மட்டும் வெற்றிகொள்ள முடியாது. எனவே, சர்வதேச மற்றும் தேசிய அளவில் முன்னெப்போதையும் விட பரஸ்பர ஒத்துழைப்பு தற்போதைய காலத்தின் கட்டாயத் தேவையாக உள்ளது. 

ஏமாற்றம் மற்றும் உதவியற்ற நிலையில் முடங்கிக் கிடப்பதன் மூலம் எதனையும் சாதிக்க முடியாது .என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். உடன்படக்கூடிய விடயங்களில் இணக்கப்பாட்டுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். 

நாட்டின் அனைத்து மக்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பாகுபாடின்றி ஒரே சீராகக் கருதி, அவற்றுக்கான தீர்வுகளைக் கண்டறிய நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். இத்தகைய தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட மதத் தலைவர்கள், அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் நாட்டு மக்கள் அனைவருக்கும் தைரியமும் சக்தியும் கிடைக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்