2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 25° ☀️ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

அரசியலமைப்புக்கு இணங்க செயல்பட வேண்டும்

உள்ளூர்June 9, 2026 · 2 months முன்0

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவுக்கு எதிராக, அரசியலமைப்பு மற்றும் சர்வதேச உடன்படிக்கைகளுக்கு முரணான வகையில் நடத்தப்படும் விதம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக விடுத்துள்ள ஊடக அறிக்கையில் அக்கட்சி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, சுரேஷ் சலே நடத்தப்படும் விதம் குறித்து நேரில் ஆராய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றை அனுப்புவது பொருத்தமானதாகும். 

இந்த விவகாரத்தில் உள்ள ஆபத்தான பின்னணியைத் தமது கட்சி அவதானித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அந்த அறிக்கை, சுரேஷ் சலே நடத்தப்படும் இத்தகைய விதம் சாதாரணமான ஒன்றாக மாற்றப்பட்டால், எதிர்காலத்தில் எதிர்க்கட்சிக் குழுக்களுக்கும் இதே நிலைமை அமுல்படுத்தப்படலாம் என்றும், அது மிகவும் ஆபத்தானதொரு போக்காகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. 

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு எதிராக எடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும், நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சர்வதேச உடன்படிக்கைகளுக்கு இணங்க அமைந்திருக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது. 

இந்த விவகாரத்தில் அரசாங்கம் செயற்படும் விதம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி மிகவும் தீவிரமாக அவதானித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.