2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 28°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

வத்தளை சுற்றிவளைப்பில் பெரும் போதைப்பொருள் வேட்டை!

உள்ளூர்July 12, 2026 · 1 month முன்1


வத்தளைப் பகுதியில் ஒரு கிலோ கிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திற்கு கிடைத்த இரகசியத் தகவலொன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்தனர். 

இதன்போது குறித்த பெண்ணிடம் இருந்து ஒரு கிலோ 140 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 538 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்டவர் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.