கொழும்பில் இன்று மகா பௌத்த சங்க மாநாடு!

மகா பௌத்த சங்க மாநாடு இன்று (27) கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.
பௌத்த துறவிகளிடையே ஒற்றுமையை மேம்படுத்துவதோடு, புத்த சாசனம், நாடு மற்றும் அதன் கலாச்சார, மத மரபுகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் பங்களிக்கும் நோக்குடன் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (27) பிற்பகல் 2.00 மணிக்கு இந்த மாநாடு ஆரம்பமாகவுள்ளது.
இந்நிகழ்வில், இலங்கை முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பௌத்த பிக்குகள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.