2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

எல்லை தாண்டி மீன்பிடித்த 12 கடற்றொழிலாளர்கள் கைது

உள்ளூர்September 28, 2025 · 11 months முன்0

எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட புதுச்சேரியை சேர்ந்த 12 கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பகுதியை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் மீன்பிடி படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணை நிறைவடைந்தவுடன் குறித்த கடற்றொழிலாளர்களும் அவர்களது படகும் மயிலிட்டி கடற்றொழில் துறைமுகத்தில் வைத்து யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக இலங்கை கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.