2026 October 11, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 22° 🌧️ மட்டக்களப்பு 28°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

முச்சக்கர வண்டி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு

உள்ளூர்April 11, 2026 · 6 months முன்2
முச்சக்கர வண்டி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு

கிராந்துருகோட்டே – தெஹியத்தக்கண்டி வீதியில், கிராந்துருகோட்டே விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனத்திற்கு அருகில் முச்சக்கரவண்டியும் வேன் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. 

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற பெண் பலத்த காயமடைந்து, கிராந்துருகோட்டே வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இவ்வாறு உயிரிழந்தவர் தெஹியத்தக்கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய பெண்ணாவார். 

விபத்து நிகழ்ந்த சந்தர்ப்பத்தில் வேனில் ஆறு பேர் பயணித்துள்ளதுடன், அவர்கள் வவுனியாவிலிருந்து தியத்தலாவை இராணுவ முகாமில் நடைபெறவுள்ள கலைந்துசெல்லும் அணிவகுப்பு நிகழ்வில் கலந்துகொள்வதற்காகச் சென்றுகொண்டிருந்துள்ளனர். 

எவ்வாறாயினும், விபத்தில் வேனில் இருந்த எவருக்கும் காயங்கள் ஏற்படாததுடன், அதன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பாக கிராந்துருகோட்டே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.