2026 October 12, Monday ⛅ கொழும்பு 23° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்களின் முக்கிய கடிதம்!

உள்ளூர்June 13, 2026 · 4 months முன்7
ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்களின் முக்கிய கடிதம்!

‘சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவோம்’என்ற தலைப்பில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. 

தடுப்புக் காவலில் உள்ள முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் சலே கொடூரமான முறையில் நடத்தப்படுவதாக சமூகத்தில் எழுந்துள்ள விவாதங்களின் அடிப்படையிலேயே இந்த கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

தடுப்புக் காவலில் இருந்த உங்களது கட்சியின் ஸ்தாபகர் ரோஹண விஜேவீர படுகொலை செய்யப்பட்டு, உயிர் பிரிவதற்கு முன்பாகவே மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு எரிக்கப்பட்ட காட்டுமிராண்டித்தனமான யுகத்தின் கொடூரமான வடுக்கள், இந்த ஜனநாயக நாட்டின் மீது மீண்டும் பதிவாகக் கூடாது என்பது அனைவரதும் மாறாத நம்பிக்கையாகும் என்றும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

எனவே, ஜனாதிபதி முன்னிலையில் வைக்கப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் சமநிலையான முறையில் ஆராய்ந்து, முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானியையும் ஒரு சாதாரண சந்தேகநபராகக் கருதி, சட்டத்தின் முன்னிலையிலான சமத்துவத்தை அவருக்கு வழங்குவதை உறுதி செய்வதில் உங்களது அன்பான கவனத்தை செலுத்துமாறு அக்குறிப்பிட்ட கடிதத்தின் மூலம் ஜனாதிபதியிடம் கோரப்பட்டுள்ளது. 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, சட்டத்தரணி டிலான் பெரேரா, டி.பி. ஹேரத், கலாநிதி குணபால ரத்னசேகர, கரு கொடித்துவக்கு, வைத்தியர் திலக் ராஜபக்ஷ, வைத்தியர் உபுல் கலப்பத்தி, லலித் எல்லாவல மற்றும் கே.பி.எஸ். குமாரசிறி ஆகியோர் இக்கடிதத்தில் கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளனர்.