2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெற்றது மலையக அரசியல் அரங்கம்

உள்ளூர்January 10, 2026 · 7 months முன்2

கடந்த 4 ஆண்டுகளாக சமூக அரசியல் தளத்தில் இயங்கிவந்த மலையக அரசியல் அரங்கம் இலங்கை தேர்தல்கள் ஆணையகத்தால் அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அதன் செயலதிபரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார்.

மலையக அரசியல் அரங்கத்தின் ஊடகச் சந்திப்பு இன்று ஹட்டனில் இடம்பெற்றது. இந்த ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

மலையகத்தில் அறிவார்ந்த அரசியல் உரையாடலை வளர்த்தல், ஆண்களுக்கு சமாந்திரமாக பெண்களுக்கும் சம வாய்ப்பு அளித்தல், மாவட்ட எல்லைகளைக் கடந்த மலையக அரசியல், அடுத்த தலைமுறைக்கான அரசியல் பாலமாக செயற்படுதல் எனும் பிரதான இலக்குகளைக் கொண்டு கடந்த நான்கு ஆண்டுகளாக சமூக அரசியல் தளத்தில் இயங்கிவந்த மலையக அர்சியல் அரங்கம் 2026 ஆம் ஆண்டு முதல் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதுடன் ‘சிறகு’ சின்னமும் வழங்கப்பட்டுள்ளது.

மலையகத்தில் உரிமை சார்ந்த அரசியல் முனவைப்புக்கான தேவை எப்போதும் இருந்து வருகிறது. 2026 ஆண்டு அரங்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலாக நிர்வாக ‘மலையக பக்கங்களின் உரிமைக் கோரிக்கை: நிலமும் நிர்வாகமும்’ எனும் தொனிப்பொருளில் மலையக மாவட்டங்கள் தோறும் தொடர் ஆய்வு கூட்டங்களை நடாத்துவதற்கும் 2026 ஆண்டு இறுதியில் மலையக மக்களின் தித்வா புயல் அனரரத்ததின் பின்னான மதிப்பீட்டறிக்கையையும் தயார் செய்து ‘ மலையகத் தீர்மானம்’ ஒன்றை நிறைவேற்றி இலங்கை அரசுக்கும் சர்வதேச அரங்குக்கும் கொண்டு செல்வதற்கும் தீர்மானித்துள்ளோம்.

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் கலப்பு முறையிலா அல்லது விகிதாசார முறையிலா எந்த முறைமையில் நடைபெறும் என இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. அரசாங்கம் அதற்காகம் குழு ஒன்றை நியமித்துள்ளது அதன் அடிப்படையில் தேர்தலில் எவ்வாறு போட்டி இடுவது என்பதையும் இப்போதைய மாகாண சபையில் மலையக மக்களுக்கு உரிமைகள் ஏதும் குறித்து வைக்கப்படவில்லை. அத்தகைய அதிகாரங்கள் எவ்வாறானதாக அமைதல் வேண்டும் எனும் அடிப்படையில் உடனன்பாடுடைய அமைப்புகளுடன் கூட்டணியாக இணைந்து போட்டியிடவும் தயாராக உள்ளோம் எனவும் தெரிவித்தார்.