2026 October 19, Monday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

ஒக்டோபர் – நவம்பரில் கனமழை எச்சரிக்கை!

உள்ளூர்June 18, 2026 · 4 months முன்6
ஒக்டோபர் – நவம்பரில் கனமழை எச்சரிக்கை!

இலங்கையில் இந்த ஆண்டின் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என மேற்கு அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தின் கடலோரப் பெருங்கடலியல் பேராசிரியர் சரித பத்தியராச்சி எச்சரித்துள்ளார்.

வலுப்பெற்று வரும் எல் நினோ காலநிலை நிகழ்வும், இந்தியப் பெருங்கடல் இருமுனையகத்தின் (IOD) மாற்றங்களும் நாட்டின் வானிலை முறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

அவரது கணிப்பின்படி, செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் தென்மேற்கு பருவமழைக் காலத்தில் வழக்கத்தை விட குறைவான மழைவீழ்ச்சி பதிவாகலாம்.

எனினும், ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நிலைமை மாறி, நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றரைக் கடந்த கனமழை பதிவாகும் வாய்ப்பு காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் வெள்ளப்பெருக்கு மற்றும் நீர்தேக்க முகாமைத்துவம் தொடர்பில் முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டியது அவசியம் என காலநிலை நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.