2026 August 15, Saturday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

சுகாதார அமைச்சர் அதிரடி அறிவிப்பு !

உள்ளூர்April 9, 2026 · 4 months முன்1

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்துடன் இன்று நடத்த முடிவு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் தாம் பங்கேற்கப் போவதில்லை என சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிதச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார் .

கலந்துரையாடல் நடத்த வாய்ப்பளிக்கப்பட்ட போதிலும், மருத்துவ சங்கம் வேலைநிறுத்தத்தைத் தொடங்குவது நியாயமற்றது என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்த வேலைநிறுத்தம் குறித்து கருத்து தெரிவித்த நலிந்த ஜெயதிஸ்ஸ, மருத்துவர்களின் வேலைநிறுத்தத்தை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளது என்றும் மேலும் தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் கூறுகையில், “நீங்கள் இப்படி நடந்துகொண்டால், இன்று வழங்கப்பட்ட கலந்துரையாடலை நான் இனி நடத்த மாட்டேன்… இந்த வேலைநிறுத்தம் நியாயமற்றது. அரசாங்கமாகிய நாங்கள் இதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்,” என்று தெரிவித்துள்ளார்.