2026 August 15, Saturday ⛈️ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கம்மன்பில…..

உள்ளூர்March 16, 2026 · 5 months முன்0

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ,உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் உண்மையான பிரதான சூழ்ச்சியாளர் யார் என்பது குறித்து மார்ச் 31ஆம் திகதி நாட்டுக்கு வெளிப்படுத்தப் போவதாக பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும், சட்டத்தரணியுமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 

சுமார் ஒன்றரை வருட காலம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரியைத் தேடி’ எனும் ஆய்வு நூலைத் தாம் தயாரித்துள்ளதாகவும், அதனை எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதி மாலை 3:30 மணிக்கு வெளியிட எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறினார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் கடந்த 7 வருடங்களாக விற்பனை செய்யப்பட்டது. இதை வைத்து அரசாங்கங்கள் அமைக்கப்பட்டன, கலைக்கப்பட்டன. எந்தவொரு அடிப்படையும் இன்றி இராணுவத்தினரை துன்புறுத்த இந்தத் தாக்குதல் பயன்படுத்தப்பட்டது. இப்போது இந்த மோசடிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான காலம் வந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.