2026 October 11, Sunday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 35° 🌧️ கண்டி 25° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

முன்னாள் அமைச்சர் மகிந்த விஜேசேகர காலமானார்

உள்ளூர்April 2, 2026 · 6 months முன்8
முன்னாள் அமைச்சர் மகிந்த விஜேசேகர காலமானார்

தென்னிலங்கையின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சருமான மகிந்த விஜேசேகர காலமானதாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். அவருக்கு வயது 83 ஆகும்.

இவர் 1989 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை மாத்தறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.

தனது நீண்டகால அரசியல் வாழ்க்கையில் பல்வேறு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பொறுப்புகளை வகித்துள்ளார்.இவர் முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் தந்தையாவார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு அக்குரஸ்ஸ பகுதியில் நடைபெற்ற சமய நிகழ்வொன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் மகிந்த விஜேசேகர படுகாயமடைந்தார்.

அதிலிருந்து அவர் உயிர் தப்பிய போதிலும், அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து நீண்டகாலமாக உடல்நலக் குறைபாடுகளினால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார்.