2026 September 27, Sunday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 31° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 32°
LIVE
வட மாகாணத்தின் சிறந்த பிரதேச செயலகங்கள் கௌரவிக்கப்பட்டன.IMF உறவை திடீரென துண்டித்தால் பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படலாம் என எச்சரிக்கை.வியட்நாம் இரண்டாம் இடம், லாவோஸ் மூன்றாம் இடம்.எல்நினோ–லாநினா மாற்றங்களை தீவிரமாக கவனிக்க வேண்டும் – சஜித்.மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் நினைவேந்தலில் பங்கேற்றார்.அரச வழக்குகளை கண்காணிக்கும் LMS கட்டமைப்புக்கு Merit Award.மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக ஜனாதிபதி நிதியத் திட்டம் விரிவாக்கம்.சீர்திருத்தப் பள்ளி விவகாரத்தில் HRCSL நடவடிக்கை!

எல்நினோ–லாநினா மாற்றங்களை தீவிரமாக கவனிக்க வேண்டும் – சஜித்.

உள்ளூர்September 27, 2026 · 1 hour முன்3
எல்நினோ–லாநினா மாற்றங்களை தீவிரமாக கவனிக்க வேண்டும் – சஜித்.

எதிர்வரும் காலங்களில் ஏற்படக்கூடிய மிகக் கடுமையான வானிலை மற்றும் காலநிலை மாற்றங்களையும் வெற்றிகரமாக எதிர்கொள்ளக்கூடிய திட்டமொன்றைத் தயாரிப்பது காலத்தின் கட்டாயத் தேவை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

நேற்று (26) நடைபெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான நாடாளுமன்ற மன்றத்தில் (Parliamentary Forum on Climate Change) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

காலநிலை அவசரநிலைகள் குறித்து பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பேராசிரியர் எல்.எம். அபேவிக்ரம ஆகியோரின் இணைத் தலைமையில் காலநிலை மாற்றம் தொடர்பான நாடாளுமன்ற மன்றம் நேற்று நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் பேராசிரியர் ரத்னசிரி பிரேமதிலக, ஐக்கிய நாடுகள் சபையைப் பிரதிநிதித்துவப்படுத்திய வாகீஷா பெரேரா,ரொபர்ட் ஒலிவர், கலாநிதி புத்திக ஹப்புஆரச்சி, உவின்சன் ஞானதீபன், கலாநிதி வீரகோன் மற்றும் நலின் முணசிங்க உள்ளிட்ட பல நிபுணர்கள் கலந்துகொண்டனர். 

அங்கு தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, “எல்நினோ மற்றும் லாநினா நிலைமைகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஒரு நாடாக நாம் மிகவும் அவதானத்துடனும் ஆர்வத்துடனும் நாட்டின் தயார்நிலையை உருவாக்க வேண்டும் என்பது எமது கருத்தாகும். 

இந்த எல்நினோ, லாநினா சூழலில் வானிலை மற்றும் காலநிலை திடீரென மாறுபடும். சில நேரங்களில் ஒரு பகுதியில் வறட்சி ஏற்படும் அதேவேளையில், அதே தருணத்தில் மற்றொரு பகுதியில் கனமழை பெய்யும்” எனத் தெரிவித்தார்.