2026 September 27, Sunday ⛅ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 33° ⛅ கண்டி 30° 🌧️ மட்டக்களப்பு 33°
LIVE
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் நினைவேந்தலில் பங்கேற்றார்.அரச வழக்குகளை கண்காணிக்கும் LMS கட்டமைப்புக்கு Merit Award.மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக ஜனாதிபதி நிதியத் திட்டம் விரிவாக்கம்.சீர்திருத்தப் பள்ளி விவகாரத்தில் HRCSL நடவடிக்கை!நல்லூரில் இருந்த திலீபனின் உருவச்சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டதாக செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.பொலன்னறுவை, முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டையிலும் மழைக்கு வாய்ப்பு.சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர SJB தீர்மானம்.அதிக மழையால் வெள்ள அபாயம் உருவாகலாம் என வானிலை அதிகாரிகள் எச்சரிக்கை.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் நினைவேந்தலில் பங்கேற்றார்.

உள்ளூர்September 27, 2026 · 1 hour முன்6
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் நினைவேந்தலில் பங்கேற்றார்.

மட்டக்களப்பு செங்கலடியில் தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வு நேற்று சனிக்கிழமை (26) இடம்பெற்றது.

ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை உறுப்பினர் செ. நிலாந்தன் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கலந்து கொண்டு தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, ஈகைச்சுடர் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியனின்,செ. நிலாந்தன், சி. சிவானந்தன், ஏறாவூர் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ். சுதாகரன், செங்கலடி வர்த்தகர்கள், ஆலய நிர்வாகத்தினர், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டு தியாகதீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினர்.

12 நாள் உண்ணாவிரதத்தின் இறுதி நாள்!

தியாகதீபம் திலீபன் 1987 செப்டம்பர் 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் உணவு மற்றும் தண்ணீர் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். இந்தப் போராட்டம் 12 நாட்கள் தொடர்ந்த நிலையில், 1987 செப்டம்பர் 26 ஆம் திகதி, தனது உண்ணாவிரதத்தின் இறுதி நாளில் அவர் உயிரிழந்தார்.

இந்திய அரசிடம் முன்வைக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படும் அவரது ஐந்து கோரிக்கைகளில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழர்களை விடுதலை செய்தல், தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்ற நடவடிக்கைகளை நிறுத்துதல், இடைக்கால நிர்வாகம் அமைக்கப்படும் வரை சிங்கள குடியேற்ற நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்துதல்,வடக்கு–கிழக்கில் புதிய பொலிஸ் நிலையங்கள் மற்றும் முகாம்கள் அமைப்பதை நிறுத்துதல், பாடசாலைகளில் இருந்து இராணுவம் மற்றும் பொலிஸாரை விலக்குதல் மற்றும் ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களை மீளப் பெறுதல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்த திலீபன் அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் அவர் 12 ஆவது நாளான செப்டெம்பர் 26 ஆம் திகதி திலீபனின் உயிர் பிரிந்தது என வரலாற்றுப் பதிவுகள் தெரிவிக்கின்றன.