2026 October 19, Monday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

14 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் கையளிப்பு!

உள்ளூர்June 19, 2026 · 4 months முன்4
14 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் கையளிப்பு!

பிரதேச செயலகங்கள் ஊடாகக் கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்களை வழங்கும் வேலைத்திட்டமொன்று நேற்று (18) முற்பகல் ஜனாதிபதி நிதியத்தின் பிரதான அலுவலகத்தில் நடைபெற்றது.

நாடு முழுவதையும் உள்ளடக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட 14 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் இதன்போது வழங்கப்பட்டதுடன், ஜனாதிபதி நிதியத்தினால் இதற்காக 58 இலட்சம் ரூபா செலவிடப்பட்டது.

இதற்கமைய, 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் பல்கலைக்கழகக் கல்வியைத் தொடரும் சுமார் 30 மாணவ, மாணவிகளுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி நிதியம் இதற்காக மொத்தமாக 98 இலட்சத்திற்கும் அதிகமான ரூபாயைச் செலவிட்டுள்ளது.

ஜனாதிபதி நிதியத்தின் செயலாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளருமான ரோஷன் கமகே உள்ளிட்ட ஜனாதிபதி நிதியத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.