2026 October 15, Thursday 🌧️ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

மாத்தறை முதல் பொத்துவில் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்… மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை!

உள்ளூர்August 7, 2026 · 2 months முன்4
மாத்தறை முதல் பொத்துவில் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்… மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை!

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பரப்பு கரையோர மீன்பிடி நடவடிக்கைகளுக்குப் பொருத்தமற்றது என மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (06) வெளியிட்ட பலத்த காற்று தொடர்பான ஆபத்தான வானிலை எச்சரிக்கை அறிவித்தலுக்கு அமைவாகவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய, மறுஅறிவித்தல் வரை குறித்த கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காகக் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அனைத்து மீனவர்களுக்கும் கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், ஏனைய பிரதேசங்களிலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் புறப்படும் படகுகளும் மாத்தறையிலிருந்து பொத்துவில் வரை பெயரிடப்பட்டுள்ள ஆபத்தான கடற்பிரதேசத்திற்குள் நுழைவதையோ அல்லது அங்கு மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதையோ தவிர்க்குமாறு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

நிலவும் வானிலை நிலைமை குறித்துப் வௌியிடப்படும் எதிர்கால அறிவித்தல்கள் தொடர்பில் தொடர்ச்சியான அவதானத்துடன் இருக்குமாறும், பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றிப் பொறுப்புடன் செயற்படுமாறும் மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.