2026 October 17, Saturday ⛅ கொழும்பு 25° ⛈️ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 22° 🌧️ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

டெங்கு பரவல் தீவிரம்; நோயாளர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது!

உள்ளூர்June 22, 2026 · 4 months முன்8
டெங்கு பரவல் தீவிரம்; நோயாளர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது!

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் 1,069 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார். 

இதற்கமைய, நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 45,037 ஆக அதிகரித்துள்ளது. 

இதுவரை 28 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

 

சாதாரணமாக நாட்டில் நாளாந்தம் 150 முதல் 200 வரையான டெங்கு நோயாளர்களே பதிவாவதாகவும், தற்போதைய ஆபத்தான சூழ்நிலையுடன் அண்மைய நாட்களாக நாளாந்தம் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை 600 முதல் 650 வரை அதிகரித்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

இந்த சூழலிலேயே நாளாந்தம் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளது. 

நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால், இந்த நிலைமையை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும் என வைத்தியர் கபில கன்னங்கர மேலும் வலியுறுத்தியுள்ளார். 

இதற்கு மேலதிகமாக, நோயாளர்களைக் கவனித்துக்கொள்வதில் வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சுகாதார ஊழியர்களும் தற்போது கடுமையான மன மற்றும் உடல் ரீதியான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக வைத்தியர் கபில கன்னங்கர கூறினார். 

இந்தக் கடுமையான அழுத்தமான சூழ்நிலை காரணமாக, எதிர்காலத்தில் நோயாளர்களின் மரண எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.