2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

எரிபொருள் வரியை குறைக்க கோரிக்கை

உள்ளூர்March 16, 2026 · 5 months முன்0

எரிபொருள் மீதான வரிகளைக் குறைத்து, எரிபொருள் விலையை இயலுமானவரை நிலையான மட்டத்தில் பேண வேண்டும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் உவைஸ் தெரிவித்துள்ளார். 

ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர், தற்போதைய சர்வதேச சூழல் இலங்கைக்கு ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் குறித்து எச்சரித்துள்ளார். 

ஏற்கனவே அனைத்து வகை எரிபொருட்களின் விலையும் 25 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. உலகச் சந்தையில் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அரசாங்கம் தலையிட்டு வரிகளைக் குறைக்க வேண்டும். 

இந்த விலையேற்றத்தின் முழுச் சுமையையும் தொழிலதிபர்கள் மற்றும் நுகர்வோர் மீது சுமத்தாமல், அரசாங்கம் வரிச் சலுகை மூலம் விலையைத் தீர்மானிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.