2026 October 16, Friday ⛅ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

சர்ச்சைக்குரிய கொள்கலன் விடுவிப்பு – தெரிவுக்குழுவில் உபாலி பன்னிலகே

உள்ளூர்February 18, 2026 · 8 months முன்1
சர்ச்சைக்குரிய கொள்கலன் விடுவிப்பு – தெரிவுக்குழுவில் உபாலி பன்னிலகே

முறையான பரிசோதனையின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை செய்வதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் உறுப்பினராக அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே நியமிக்கப்பட்டுள்ளார்.

நிலையியற் கட்டளை 106இன் விதிகளுக்கு அமைவாக இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சபாநாயகர் இன்று (18) பாராளுமன்றுக்கு அறிவித்தார்.

கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல் விடுவிக்கப்பட்டமை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவும், அது தொடர்பான முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைக்கவும் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் அநுர கருணாதிலக விலகியதையடுத்து வெற்றிடம் ஏற்பட்டிருந்தது.

குறித்த வெற்றிடத்திற்கு, கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையில் இந்த குழு செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.