2026 October 16, Friday ⛅ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

சிறுவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை- இங்கிலாந்து பிரதமர்

உலகம்February 18, 2026 · 8 months முன்1
சிறுவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை- இங்கிலாந்து பிரதமர்

இன்றைய காலகட்டங்களில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகின்றனர்.

ஆனால் சிறுவர்கள் பலரும் இதில் மூழ்கிக் கிடப்பதால் கவனக்குறைவு, தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் அவர்களுக்கு ஏற்படுகின்றன.

எனவே 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் தடை விதித்தது.

இந்தத் தடையானது கடந்த ஆண்டு டிசம்பர் முதல் அமுலுக்கு வந்தது. ஸ்பெயின், பிரான்சிலும் சிறுவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்திலும் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக தடை சட்டத்திற்கான ஆலோசனை கடந்த மாதம் தொடங்கப்பட்டது.

விரைவில் இதற்கான சட்டம் கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.