2026 October 10, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 29° 🌧️ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ள அதிரடி தகவல்!

தொழில்நுட்பம்April 27, 2026 · 6 months முன்8
மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ள அதிரடி தகவல்!

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப் செயலி, பழைய எண்ட்ரோய்ட் இயங்குதளங்களில் இயக்க முறைமை சேவையை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

 இதன்படி, 2026 செப்டெம்பர் 8-ஆம் திகதி முதல் எண்ட்ரோய்ட் 6.0 (Android 6.0) பதிப்பிற்கு முந்தைய பதிப்புகளில் இயங்கும் கையடக்க தொலைபேசிகளில் வட்ஸ்அப் செயல்படாது.
வட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது.

இந்த புதிய தொழில்நுட்ப வசதிகள் தடையின்றி செயற்பட சிறந்த மென்பொருள் மற்றும் வன்பொருள் (Hardware) செயல்திறன் அவசியமாகும்.பழைய இயங்குதளங்கள் இந்த நவீன மாற்றங்களுக்கு ஈடுகொடுக்க முடியாத காரணத்தால், பயனர் பாதுகாப்பையும் செயல்திறனையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது வட்ஸ்அப் பயன்படுத்த எண்ட்ரோய்டு 5.0 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்புகள் தேவைப்படுகின்றது.புதிய அறிவிப்பின்படி, எண்ட்ரோய்ட் 5.0 மற்றும் 5.1 பதிப்புகளில் இயங்கும் கையடக்க தொலைபேசிகளில் செப்டெம்பர் 8 முதல் இந்த சேவை நிறுத்தப்படும்.இந்த மாற்றம் எண்ட்ரோய்ட் பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும்.ஐபோன் (iPhone) பயனர்களுக்கு இதில் எந்த பாதிப்பும் இல்லை.