2026 August 15, Saturday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

தற்போதைய சூழல் காரணமாக வாகன விலை ஏற்றம்?

உள்ளூர்May 26, 2026 · 3 months முன்0

வாகனங்களை வாங்குவதற்காக வழங்கப்படும் கடன் மற்றும் லீசிங் வசதிகளில் செய்யப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் காரணமாக, நாட்டில் வாகன இறக்குமதி மற்றும் விற்பனை துறையில் சரிவு ஏற்படக்கூடும் என வாகன இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போதைய பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்த மாற்றங்கள் வாகனங்களின் விலையை மேலும் உயர்த்தும் அபாயத்தையும் உருவாக்கும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும், அபாயங்களை கட்டுப்படுத்தவும் மத்திய வங்கி புதிய நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, மோட்டார் வாகனங்களுக்காக வழங்கப்படும் கடன் மற்றும் லீசிங் வசதிகளின் உச்ச வரம்புகள் இன்று (25) முதல் குறைக்கப்பட்டுள்ளன.

புதிய விதிமுறைகளின் கீழ், நாட்டில் பதிவு செய்யப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேல் பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கு வழங்கப்படும் கடன் வசதி 60 சதவீதமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, அதிநவீன வாகனங்கள் மற்றும் ஒரு ஆண்டுக்கு குறைவாக பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கு வழங்கப்படும் லீசிங் வசதிகளும் இன்றிலிருந்து குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.