2026 October 17, Saturday 🌧️ கொழும்பு 25° ⛈️ யாழ்ப்பாணம் 26° 🌧️ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

2026 உயர்தர மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 28 வரை!

உள்ளூர்July 15, 2026 · 3 months முன்5
2026 உயர்தர மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 28 வரை!


2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகளுக்கான மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களைக் கோருவது தொடர்பான அறிவித்தல் ஒன்றை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

 அதற்கமைய, தகுதியான பரீட்சகர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பம் கோரும் நடைமுறையானது இன்று (14) முதல் எதிர்வரும் ஜூலை மாதம் 28ஆம் திகதி வரை இணையவழியில் (Online) மாத்திரமே மேற்கொள்ளப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

 இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.donets.lk அல்லது onlineexams.gov.lk.eic ஆகிய இணையத்தள முகவரிகளுக்குச் சென்று இதற்கான விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிக்க வேண்டும் என அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 மேலும், இது தொடர்பில் ஏதேனும் மேலதிக விபரங்கள் அல்லது விசாரணைகள் தேவைப்படின், 0112784208 / 0112784537 அல்லது 0112785922 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புகொண்டு விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பரீட்சைத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.