2026 August 15, Saturday ⛈️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

ஆரோக்கியமற்ற நிலையில் பல பகுதிகளில் காற்றின் தரம்

உள்ளூர்January 20, 2026 · 7 months முன்2

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) வெளியிடப்பட்ட தரவுகளின்படி, கடந்த 24 மணிநேரத்தில் இலங்கையின் பல நகர்ப்புறங்களில் காற்றின் தரம் சற்று ஆரோக்கியமற்ற மட்டத்தில் (Slightly Unhealthy) காணப்பட்டது.

கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி, குருணாகல் மற்றும் காலி ஆகிய பகுதிகளில் இலங்கை வளிமண்டலத் தரச் சுட்டெண் (SL AQI) 104 முதல் 144 வரை பதிவாகியுள்ளது. வளிமண்டலத்தில் PM2.5 நுண்துகள்களின் அளவு அதிகரித்தமையே இதற்கு முக்கிய காரணமாகும்.

நுவரெலியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில நகரங்களில் காற்றின் தரம் மிதமான அளவில் (Moderate) காணப்பட்டது.

அடுத்த 24 மணிநேரத்திலும் பெரும்பாலான நகரங்களில் இந்த நிலை தொடரக்கூடும் என Nடீசுழு எதிர்வு கூறியுள்ளது. இதன்போது வளிமண்டலத் தரச் சுட்டெண் 48 முதல் 140 வரையான வரம்பிற்குள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.