2026 October 15, Thursday ⛅ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 26° 🌧️ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் விபத்து!

உள்ளூர்April 26, 2026 · 6 months முன்15
இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் விபத்து!

தம்புள்ளை – மாத்தளை பிரதான வீதியின் நாவுல, நாலந்த பகுதியில் இன்று காலை 9.20 மணியளவில் தனியார் பேருந்து ஒன்றும், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றுடன் ஒன்று மோதி பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளன.

விபத்தில் காயமடைந்த 11 பேர் நாலந்த பிரதேச வைத்தியசாலை மற்றும் மாத்தளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், சபாநாயகர் கண்டி வீதி வழியாக கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தார். இதன்போது விபத்தைக் கண்ட சபாநாயகர், உடனடியாகச் செயற்பட்டு காயமடைந்தவர்களைப் பேருந்துகளில் இருந்து வெளியேற்றவும், அவர்களை சிகிச்சைக்காக அனுப்பி வைக்கவும் நேரில் நின்று உதவி வழங்கியுள்ளார்.