2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 25° ☀️ யாழ்ப்பாணம் 28° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

மாத்தறை சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

உள்ளூர்January 30, 2026 · 7 months முன்0

மாத்தறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர் சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தப்பிச் சென்ற கைதி பாணந்துறை – குருப்புமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார். 

குறித்த கைதி சட்டவிரோத மதுபான உற்பத்தி தொடர்பில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த கைதி வியாழக்கிழமை மாலை சிறைச்சாலையில் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்த போது சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த கைதி 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுவிக்கப்படவிருந்ததாக சிறைச்சாலை அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர். 

தப்பிச் சென்ற கைதியை தேடும் பணிகளில் பொலிஸாரால் ஈடுபட்டுள்ளனர்.