2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 25° ☀️ யாழ்ப்பாணம் 28° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

4 வாகனங்களை சேதப்படுத்திய சந்தேகநபர் கைது

உள்ளூர்January 13, 2026 · 7 months முன்1

பத்தரமுல்லை – தியத உயனவிற்கு அருகில் பயணித்துக் கொண்டிருந்த சில வாகனங்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவர், தனது கையில் இருந்த ஆயுதம் போன்ற உபகரணத்தைக் கொண்டு தாக்கும் காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.

நேற்று (12) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தையடுத்து, தாக்குதல் நடத்திய சந்தேக நபரான மோட்டார் சைக்கிள் செலுத்துனரை வெலிக்கடை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் பின்தொடர்ந்து சென்று குறுகிய நேரத்திற்குள் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரால் சுமார் 4 வாகனங்களுக்குச் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைது செய்யப்பட்டவர் ராகம பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய நபராவார் என்பதுடன், அவர் இன்று (13) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.