2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 28° 🌧️ மட்டக்களப்பு 32°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

களனி பெரஹெராவை முன்னிட்டு சிறப்பு போக்குவரத்து திட்டம்

உள்ளூர்January 7, 2026 · 7 months முன்3
களனி பெரஹெராவை முன்னிட்டு சிறப்பு போக்குவரத்து திட்டம்

களனி ரஜமஹா விஹாரையின் துருத்து மகா பெரஹெராவை முன்னிட்டு இன்று (07) பிற்பகல் 03.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை களனி, பேலியகொடை, பியகம, பத்தரமுல்ல உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சிறப்பு போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது . பெரஹெரா நடைபெறும் காலப்பகுதியில் பல பிரதான சாலைகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக, போக்குவரத்து நெரிசல் மற்றும் தாமதங்களைத் தவிர்க்க பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மாற்று வழிகளை பயன்படுத்தி, முன்கூட்டியே பயணங்களை திட்டமிடுமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.