2026 August 17, Monday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ☀️ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

நாளை முதல் கனமழை

BREAKINGஉள்ளூர்January 7, 2026 · 7 months முன்0
நாளை முதல் கனமழை

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் தற்போது நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம், தற்போது மட்டக்களப்பிலிருந்து 700 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. 

இந்தத் தொகுதியானது அடுத்த சில மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்க மண்டலமாக வலுவடைந்து, நாளை (08) இலங்கையின் கிழக்குக் கரையோரத்தை அண்மிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறல் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெந்திஸ் தெரிவித்தார். 

இந்தத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாட்டில் மழையுடனான வானிலை மற்றும் காற்றின் வேகம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

விசேடமாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இந்நிலையில், எதிர்வரும் சில நாட்களில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் வானிலை முன்னறிவிப்புகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மெரில் மெந்திஸ் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்