2026 October 25, Sunday 🌧️ கொழும்பு 26° 🌧️ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

இளம் வயதில் சட்டத்தரணியான இந்திய வம்சாவளி மாணவி

உலகம்August 20, 2025 · 1 year முன்3
இளம் வயதில் சட்டத்தரணியான இந்திய வம்சாவளி மாணவி

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவி ஒருவர், பிரிட்டனில் 15 வயதில் சட்டப் படிப்பில் சேர்ந்து, 21 வயதில் வழக்கறிஞராக பதிவு செய்து சாதனை படைத்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம், மாயப்பூரில் உள்ள ‘இஸ்கான்’ எனப்படும் கிருஷ்ண பக்தி இயக்கத்தில் வளர்ந்தவர் கிருஷாங்கி மேஷ்ராம், 21. தற்போது மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் பெற்றோருடன் உள்ளார்.இவரது குடும்பம் ஆன்மிக பணிக்காக உலகின் பல்வேறு நாடுகளுக்கு செல்கிறது.

இந்நிலையில், இவருக்கு ஐரோப்பிய நாடான பிரிட்டனில் சட்ட கல்வி முடித்து, அங்கு வழக்கறிஞர் ஆக வேண்டும் என ஆசை. அதற்காக பெற்றோரை பிரியவும் மனமில்லை.

இதனால் பிரிட்டனின் திறந்தநிலை பல்கலையில் 15 வயதில் எல்.எல்.பி., எனப்படும் இளநிலை சட்டப்படிப்பில் சேர்ந்தார்.பொதுவாக பிரிட்டனில் இந்த படிப்பில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் சேர்வர்.ஆனால், இவர் 18 வயதில் படிப்பை நிறைவு செய்தார். வழக்கறிஞராக பதிவு பெறுவதற்கான தகுதித் தேர்வை எழுதி தற்போது தேர்ச்சி பெற்றார். இதையடுத்து 21 வயதில் வழக்கறிஞராக பதிவு செய்தார். இதன் மூலம் பிரிட்டனில் சமீபத்திய ஆண்டுகளில் பதிவு செய்த மிகவும் இளம் வயது வழக்கறிஞர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.